விஷேட போக்குவரத்து சேவை !

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்ட விஷேட போக்குவரத்து சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை ரயில்வே திணைக்களம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் பங்களிப்புடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இந்த போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ரஜரட்ட, கொழும்பு, கண்டி, கம்பஹா மற்றும் வடமேல் பிரதேசத்தை உள்ளடக்கிய வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 600 பஸ்கள் சேவையில் ஈடுபடும்.

இதற்கு மேலதிகமாக எத்தகைய சந்தர்ப்பத்திலும் சேவையில் ஈடுபடக்கூடிய வகையில் மேலதிக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று தொடக்கம் அநுராதப்புரத்துக்கும் மிகிந்தலைக்குமிடையில் விஷேட ரயில் சேவை இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு கோட்டை – அநுராதபுரம் மஹவ மற்றும் அநுராதபுரம் பெலியத்த ரயில் நிலையங்கள் வரையிலும் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.


Recommended For You

About the Author: Editor