வேல்ஸ், ரக்பி வீராங்கனையை காணவில்லை!!

ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸை நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை முதல் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ், மேர்திர் ரிட்பில் நகரைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் புறூக் மொறிஸ் காணாமல் போனதை அடுத்து மலைகள் மற்றும் நீர்நிலைகள் முதலான இடங்களில் பொலிஸார் தேடிவருகின்றனர்.

சனிக்கிழமை அதிகாலை நகர மையத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றவேளையில் காணாமல் போயுள்ளார்.

எனினும் புறூக் மொறிஸ் தனது வீட்டிற்குச் செல்லவில்லை என்று சவுத் வேல்ஸ் பொலிஸார் கருதுகின்றனர்.

சனி, ஞாயிறு நாட்களில் தேடுதல் முயற்சிகளைத் மேற்கொண்ட மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் புறூக் மொறிஸைத் தேடி வருகின்றன.

புறூக் மொறிஸ் சனிக்கிழமை அதிகாலை 2:30 க்கு சிவப்பு நிற மேல் சட்டையும் ஜீன்ஸும் அணிந்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor