இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை..!!

இன்று திங்கட்கிழமை கடும் இடி மின்னல் தாக்குதல்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 Météo-France  இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 14 ஆம் திகதி இன்று பெரும் புயல் ஒன்று இல்-து-பிரான்ஸ் மாகாணத்தை கடக்கின்றது.
இதன் காரணமாக 19 மணியில் இருந்து 22 மணி வரை கடும் மின்னல் தாக்குதல்களும் கன மழையும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தவிர இன்றைய நாளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.
தவிர மொத்தமாக 42 மாவட்டங்களுக்கும் இதே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தைத் தொடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor