ரீபபுளிகன் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பு..!!

ரீபபுளிகன் கட்சிக்கு புதிய தலைவராக அதிக வாக்குகளுடன் Christian Jacob தெரிவாகியுள்ளார்.

வலதுசாரி கட்சியான des Républicains கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த முதலாம் சுற்று வாக்கெடுப்பில் 62.58 வீத வாக்குகளை பெற்று Christian Jacob வெற்றி பெற்றுள்ளார். இதே கட்சியின் முக்கிய தலைவரான Julien Aubert 21.28 வீத வாக்குகளை பெற்றிருந்தார்.

62,401 கட்சி உறுப்பினர்களிடம் வாக்கு எடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் 545 வாக்குகள் யாரையும் ஆதரிக்காமல் செலுத்தப்பட்டது. 61,856 பேர் மொத்தமாக வாக்குச் செலுத்தினர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஜனாதிபதி, முன்னாக் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் பெருமைகளை குறிப்பிட்டு <<சேகரிக்கவும், சரிசெய்யவும், மீண்டும் உருவாக்கவும்>> எனும் வார்த்தைகளில் மீண்டும் கடையை கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டார். <<மிகச்சிறந்த பலம்வாய்ந்த வலதுசாரியாக நாம் மாறுவோம்>> எனவும் அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டில் ரீபபுளிகன் கட்சியில் 235,000 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் தற்போது இது ஒரு இலட்சம் உறுப்பினர்களால் குறைவடைந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor