ஹோட்டலின் சுவர் விழுந்ததில் ஒருவர் பலி – 18 பேர் படுகாயம்

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றின் வெளிப்புற சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஹார்ட் ராக் என்ற பிரமாண்ட ஹோட்டலின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் வெளிப்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நீண்ட உயரத்தில் கட்டப்பட்டுவந்த ஹோட்டலின் சுவர் இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதும் புகையும், புழுதியும் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழ்ந்த நிலையில் 18 பேர் படுகாயமடைந்தனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த 3 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் கட்டிடப்பணிகள் நடந்துக் கொண்டிருந்த போது முதலில் அதிர்வு ஏற்பட்டதாகவும் அடுத்த சில நிமிடங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் சுவர் சரிந்து விழுந்ததாகவும் அருகில் இருந்து பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சுவர் இடிந்து விழுந்த பகுதியில் கட்டிடப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் இருப்பதால், அது எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்று அஞ்சப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor