ஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்துள்ள சாஹோ டீசர்!

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சாஹோ’.

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த டீசர் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிறைந்துள்ளன. அதோடு அந்த காட்சிகள் அனைத்தும் த்ரில்லர் இசையுடன் கூடியதாக அமைந்து பார்ப்பவரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு உள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் நாயகியான ஷ்ரத்தா கபூரின் ஆக்ஷனும் சிறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor