அமெரிக்காவில் நடந்த விசித்திர போட்டி!

அமெரிக்காவில் வித்தியாசமான போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன், வெற்றியாளருக்கு பீர் போட்டில்கள் பரிசளிக்கப்பட்டுள்ளது.

மனைவியை சுமர்ந்தவாறு ஒடும் போட்டியே அமெரிக்காவின் மைனே மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டிருந்த சேறும் சகதியுமான குட்டை, மரத்திலான தடுப்பு, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து மனைவியை சுமந்துக்கொண்டு கணவன்மார்கள் ஓடினர்.

இதில் டெலவேரைச் சேர்ந்த ஜெரோம் ரோஹம் மற்றும் ஒலிவியா ரவுலிங் தம்பதியினர் 55 வினாடிகளில் இறுதிக்கோட்டை அடைந்து வெற்றிப்பெற்றனர்.

வெற்றி பெற்றவரின் மனைவி எடையை போன்று 5 மடங்கு பணமும், எடைக்கு நிகராக பீர் போட்டில்களும் பரிசாக வழங்கப்பட்டது.

குறித்த போட்டியானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தாலும், இரசிகர்களுக்கு விருந்தளித்திருந்தது.


Recommended For You

About the Author: Editor