பருவநிலை மாற்றத்தை தடுக்குமாறு வலியுறுத்தி போராட்டம்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவை தடுக்குமாறு வலியுறுத்தி லண்டனில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார்.

இதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவ நிலை மாற்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவை தடுக்குமாறு வலியுறுத்தி, லண்டனில் எலும்புகூடுகளை ஊர்வலமாக எடுத்து சென்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor