எல்பிட்டிய தேர்தலில் வென்றவர்களின் விபரம் புதன் வெளியிடப்படும்.

எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு அந்தந்தக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று பெயர்ப் பட்டியல் தமக்குக் கிடைக்கும் என மாவட்ட செயலாளர் கூறினார். பெயர்ப் பட்டியலை வர்த்தமானியின் மூலம் அறிவித்த பின்னர், பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம் நடைபெறும் தினம் அறிவிக்கப்படும். தலைவரும் பெயரிடப்படுவார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற்றது. எந்தவித வன்முறையோ தேர்தல் முறைகேடுகளோ இடம்பெறவில்லை என்று காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்