புலி மீள் உருவாக்க முயற்சி என கிளிநொச்சி வாசி கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமையா விவேகானந்தன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்