புத்தளத்தில் மர ஆலையில் தீ விபத்து!

புத்தளம், மதுரங்குளி நகரில் அமைந்துள்ள மர ஆலையில் ஏற்பட்ட தீயினால் அங்கிருந்த இயந்திரங்கள் மற்றும் மரப் பலகைகள் முற்றாக எரிந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணியளவில் குறித்த மர ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினருடன் பொது மக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீ விபத்தினால் ஆலை முழுமையாக எரிந்துள்ளதுடன் அங்கிருந்த இயந்திரங்கள், தளபாடங்கள் உள்ளிட்டவைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. இந்நிலையில் சுமார் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து மின்சார கசிவினாலேயே ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேரதிக விசாரணை இடம்பெற்று வருகிறது.


Recommended For You

About the Author: Editor