இமயம் பயணமானார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு பயணமாகியுள்ளார்.

இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஹிந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

மும்பையில் கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலைக்கு சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டிருந்த அவர், இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor