பேஸ்புக் பார்ட்டி 4 பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது!

ஹோட்டல் ஒன்றில் 4 யுவதிகள் உள்ளிட்ட 25 பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை, தெம்பிலியான பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டு ஒன்றிணைந்த இளைஞர்கள் குழுவினால் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தை சுற்றி வளைத்த பொலிசார் குறித்த 25 பேரையும் கைது செய்துள்ளனர்.

நேற்று (12) இரவு இடம்பெற்ற இவ்வைபவத்தில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் 21 இளைஞர்கள் மற்றும் 4 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் எம்பிலிபிட்டி, தெஹியோவிட்ட, கொஸ்கொட, கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசமிருந்து, 1315 மில்லி கிராம் ஹெரோயின், 525 மில்லி கிராம் ஐஸ், 10.21 கிராம் கஞ்சா ஆகியவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (13) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவிசாவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor