டென்மார்க்கிலிருந்து பிரான்ஸ் சென்ற இளம் குடும்பஸ்தர் பலி!

பிரான்ஸில் பெரியதாயாரின் இறுதிச் சடங்கில் பங்கெடுப்பதற்காக டென்மார்க்கிலிருந்து சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த றொனால்ட்டன் (வயது33) என்பவர் தனது குடும்பத்தாருடன் டென்மார்கில் வசித்துவருகிறார்.

அவருடைய பெரியதாயார் பிரான்ஸின் பரிஸ் நகரில் வில்நெப் சென்ஜோர்ச் பகுதியில் வசித்து வந்த நிலையில் அண்மையில் காலமாகியிருந்தார்.

பெரியதாயாரின் இறுதிச் சடங்கில் பங்குகொள்வதற்காக றொனால்ட்டனும் குடும்பத்தினரும் பிரான்ஸ் சென்றிருந்தனர்.

இந்நிலையில் அங்கு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்தவர்கள் இரவு 3மணியளவில் வெளியில் சென்றிருந்ததாகவும் வீட்டிற்கு சமீபமாக உள்ள பெற்றோல் செற் பகுதியில் நின்றிருந்தவேளை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஒரு வாரம் வைத்தியசாலையில் கோமாநிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றைய நாள் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து அருவியின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த குடும்பஸ்தரின் சடலத்தினை பிரான்ஸ் பொலிஸார் டென்மார்க் நாட்டிற்கு அனுப்பிவைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

மரணத்துக்கான காரணம் பொலிஸாராலும் கண்டுபிடிக்கமுடிவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குடும்பஸ்தர் இரண்டுவயது பிள்ளையின் தந்தை என்பதுடன் அவருடைய துணைவியார் நிறைமாதக் கர்ப்பவதி என்றும் தெரியவருகிறது.


Recommended For You

About the Author: Editor