விமான நிலைய திறப்பு விழாவில் அரசியல் செய்யாதீர்கள்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலனுக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் கருத்து வெளியிடுகையில்,
“தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டால், அது தேர்தல் சட்ட மீறலாக கருதப்படும்.

எனவே, அவ்வாறு அரசியல் நலனைப் பெறுவதற்காக விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என கூறியுள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்