டென்மார்க் நாட்டில் ஈழத்து சிறுவர்கள் சாதனை !!

டென்மார்க் நாட்டில்  de danskedanseskole என்னும் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட நாடு தழுவிய Danmark mester Hiphop ,

Disco நடனப்போட்டியில்  கேர்ணிங் நகரத்தை சேர்ந்த பிள்ளைகளான செரின்,ஷரன்,ஜானுஸ்,ஷனன்,சிரோட்டன் ,ஷாமின் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

அதில் HipHop என்னும் நடனத்தில் இரண்டாம் படியான Rekruttering  junior 2 என்னும் பிரிவில் சிரோட்டனும் ,மூன்றாம் படியான talent junior 2 என்னும் பிரிவில் ஷனனும், talent junior 1 என்னும் பிரிவில் ஜானுஸும், நான்காம்  படியான Konkurrence junior 2 என்னும் பிரிவில் ஷரனும்,
நான்காம்  படியான Konkurrence børn 1 என்னும் பிரிவில் ஷாமினும் ஐந்தாம் ( இறுதி) படியான super konkurrence junior2 என்னும் பிரிவில்  செரினும் பங்குபற்றினார்கள்.

அதில் சிரோட்டன் அரை இறுதி வரை பங்குபற்றினார். ஷனன் A வரிசையில் நான்காம் இடத்தையும் ஜானுஸ் B வரிசையில் முதலாம் இடத்தையும் ஷரன் A வரிசையில் இரண்டாம் இடத்தையும் ஷாமின் mester என்னும் வரிசையில் மூன்றாம் இடத்தையும் செரின் mester என்னும் வரிசையில் ஏழாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அதே போல் Disco என்னும் நடனத்தில் மூன்றாம் படியான talent børn 1 என்னும் பிரிவில் ஷாமினும் இறுதி  படியான super konkurrence junior 2 என்னும் பிரிவில் செரினும் பங்குபற்றினார்கள்.

அதில் ஷாமின் mester  வரிசையில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டார் . செரின் A வரிசையில் அரைஇறுதி வரை பங்குபற்றினார்.

இந்த நடனப்போட்டி Brøndby உள்ளரங்கில் நடைபெற்றது மூன்று நாட்கள்
நடைபெற்றது .

அதில் நடுவர்களாக Holland , Italy, Spanien , England ,Russia  , sverige, makedonien, Belgien ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் கடமையாற்றினார்கள்.


Recommended For You

About the Author: Editor