மகிழ்ச்சியான வாழ்வை உருவாக்குவதே நோக்கம்

ஜனாதிபதியான பின்னர் நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும், திருப்திகரமாகவும் வாழ்கின்றார்களா என்பது குறித்து அடிக்கடி மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “வேறு விடயங்கள் பற்றி கரிசனை காட்டுவதை விட பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதே பெறுமதியான விடயமாகும்.

அனைத்து குடிமக்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு குடும்பத்தினதும் பொருளாதார முன்னேற்றம், சமூக முன்னேற்றம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்களா என்று மதிப்பீடு செய்வதே எனது மிகப் பெரிய எதிர்பார்ப்பாகும்.

அதன்படி, மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றுக்கு துரிதமான தீர்வுகளை வழங்கி, தாய் நாட்டினுள் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஒருநாளும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை.

பொதுமக்களின் காலடிக்கு வரக்கூடிய ஒருவரையே தெரிவுசெய்து நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டும். எனவே எனக்கு அந்த பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றக்கூடிய தகுதி இருக்கின்றது” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்