சென்னை- யாழ் வாரத்திற்கு ஏழு விமான சேவை!

சென்னையில் இருந்து யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு ஏழு விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ANS வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகளுக்கு அலையன்ஸ் எயர் நிறுவனம், யுவுசு 72-600 விமானங்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor