இழுபறியில் கண்டாவளை பிரதேச செயலக நிர்மானப் பணிகள்!!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய கட்ட நிர்மானப் பணிகள் கடந்த நான்கு வருட காலமாக இழுபறி நிலையில் காணப்படுகிறதாக வ்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு வருடங்களில் மூன்று ஒப்பந்த காரர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் என பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது

தற்போது கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு புளியம்பொக்கனைச் சந்தியிலும், பிரதேச செயலாளர் உட்பட ஏனைய பிரிவுகள் கண்டாவளை வெலிகண்டல் சந்தியிலும் இயங்கி வருகின்றன.

இதன் காரணமாக பொது மக்கள் தங்களின் தேவைகளுக்கு அலைக்கழிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.

அத்தோடு ஒவ்வொரு வருட பருவ மழையின் போதும் வெலிகண்டல் சந்திக்கருகில் அமைந்துள்ள பிரதேச செயலக பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புளியம்பொக்கனைச் சந்தியில் அமைக்கப்பட்டு வரும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை விரைவாக பூர்த்தி செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor