வாக்கு சீட்டில் கோட்டாவுக்கு அடுத்து நாமலின் பெயர்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய ஒற்றுமை முன்னணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுங்கும், வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.

இதன்படி, வாக்குச் சீட்டில் முதலாவது இடத்தில் நாய் சின்னத்தில் போட்டியிடும் அபரக்கே புஞ்ஞானந்த தேரரின் பெயர் இடம்பெறவுள்ளது.

கடைசி இடத்தில், மின்குமிழ் சின்னத்தில், போட்டியிடும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பெயர் இடம்பெறவுள்ளது.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அடுத்ததாக, மூக்குக் கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும், தேசிய ஒற்றுமை முன்னணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் எந்த ஒழுங்கில் இடம்பெறுவார்கள், அவர்களின் சின்னம் என்ன என்பதை விளக்கும் வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்