எல்பிட்டியாவில் மொட்டு மலர்ந்தது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளின்படி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  23,372 வாக்குகள் பெற்று 17 உறுப்பினர்களை தனதாக்கியது.

ஐக்கிய தேசியக் கட்சி – 10,113 வாக்குகள் பெற்று 7 உறுப்பினர்களை பெற்றுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகள் பெற்று 3 உறுப்பினர்களை தனதாக்கியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி  2,435 வாக்குகள் பெற்று 2 உறுப்பினர்களை பெற்றுள்ளதுடன், ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி 310 வாக்குகளை மாத்திரம் பெற்றதால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை.


Recommended For You

About the Author: ஈழவன்