3 கோடி 30 இலட்சம் பெறுமதியில் பொகவந்தலாவை பிரதேச பாதைகள் அபிவிருத்தி

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் 3 கோடி 30 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான கல்யாணகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொகவந்தலாவை பிரதேசத்தில் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை கிளார்னி, திரேசியா, மோரா வழியாக டின்சின் க்கு செல்வதற்கான பாதையானது கார்பட் பதையாக புனரமைக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக RD Chief engineer மற்றும் Technical officer அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எனவே வெகு விரைவில் இப்பாைதை புனரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( லிந்துல. சுரேஸ்


Recommended For You

About the Author: Editor