அவுஸ்ரேலியாவில் விசித்திர போராட்டம்!

அவுஸ்ரேலியாவில் கடற்கரை மணலில் தலையை புதைத்து விசித்திர போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காடுகள் அழிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல் உள்ளிட்ட காரணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு வலியுறுத்தி உலகின் பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவ்வாறு பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேன்லி கடற்கரையில் திரண்ட இயற்கை ஆர்வலர்கள் பள்ளம்தோண்டி தங்கள் தலையை மணலில் புதைத்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று, பிரிஸ்பேன் நகரில் திரண்ட பொதுமக்கள் வீதியில் படுத்தும், டிஸ்கோ நடனம் ஆடியும் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காற்றிலுள்ள கார்பன் அளவை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்பதே தங்களின் குறிக்கோள் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor