வெடிக்கும் நிலையில் வெடிகுண்டு மீட்பு!!

மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, கருதேவல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இருந்து குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலாஸ்டிக் மற்றும் இரும்பு கம்பியின் உதவியுடன் வெடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர குண்டு ஒன்று, 4 டெடனேட்டர்கள், 4 பட்டாசு உட்பட பொருட்கள் தொகை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

அந்த வீதியில் பயணித்த நபர் ஒருவரினால் இந்த சந்தேகத்திற்குரிய பார்சல் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட பொலிஸார், இரும்பு ஒன்றுக்குள் வெடிபொருட்ள் நிறைத்து, டெடனேட்டர் மற்றும் பட்டரி உதவியுடன் தயாரிக்கப்பட்ட குண்டை வெடிப்பதற்கு தயார் படுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த குண்டை உக்குவெல இராணுவ குழுவினர் சோதனையிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு 12 எம்பியர் பட்டரி, சிறிய மின்விளக்கு, பட்டாசுகள், 4 டெடனேட்டர்கள், ஒரு கிலோ கிராம் வெடிபொருள் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த வெடி பொருட்கள் என்ன காரணத்திற்காக கொண்டு வரப்பட்டதென இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor