உறுதிமொழி கிடைத்தால் விலகுவேன்

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கையை, ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புகளை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில், நேற்று(10) நடத்திய ஊடகவியலாளார் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய இனத்தின் மறுமலர்ச்சிக்கான மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசிய இனத்தின் பொது வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன்” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் கடந்த காலங்களில் நான் போட்டியிட்டபோதும் பணம் வாங்கிவிட்டு ஒரு தரப்பினரை, வெற்றிப்பெற வைப்பதற்காக செயற்படுகின்றேன் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர் என்று தெரிவித்த அவர், இன்றும் நான் தேர்தலில் இறங்கியதும் ராஜபக்‌ஷ தரப்பிடம் பணம் வாங்கி போட்டியிடுவதாக குற்றம் சுமத்துகின்றனர் என்றார்.

2010ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், போரை முன்னிணின்று வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்திருந்தனர். அந்த நேரத்தில் கஜேந்திரகுமாரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுமையுடன் உள்ளது. எனினும், இவர்களின் திட்டம் தேர்தலுக்கு ஒருவாரமே இருவாரத்துக்கு முன்னர் மஹிந்த தரப்பை ஆட்சி பீடம் ஏறக்கூடாது எனக்கூறி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படக்கூடும் பெரும்பாலும் கூட்டமைப்பின் திட்டம் இதுவாகவே இருக்கும் என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்