பிரச்சார கூட்டத்திற்கு சென்றவர் மரணம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்கு சென்ற குழுவினரில் ஒருவர், தான் பயணித்து கொண்டிருந்த பேருந்திலிருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில் திருகோணமலை- தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரே உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு திருகோணமலை மாவட்டம் சேருவில தொகுதி முன்னாள் அமைப்பாளர் அருண் சிறிசேனவின் தலைமையில் சென்ற குழுவினரில்  ஒருவர், தான் பயணித்து கொண்டிருந்த பேருந்திலிருந்து விழுந்ததில் உயிரிழந்ததாக விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மதுபோதையில் இருந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது அவரது சடலம் வாரியபொல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்