எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார்

எதிர்பாராமல் இடம்பெறக்கூடிய எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க இராணுவம் தயாராக உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்காலத்தை சிந்தித்து நான்கு முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தேசிய பாதுகாப்பை கடுமையாக அமுல்படுத்துதல், மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இராணுவத்தின் முன்னேற்றம் மற்றும் இராணுவ சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நவீன உலகத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள், அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், இராணுவத்தை தயார்படுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்