இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு – நீங்கள் அச்சமடைய வேண்டுமா?

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் குறுகிய நீளம் கொண்ட காணொளிகளை பகிர்ந்து கொள்ளும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள், எவ்வித கடவுச்சொல்லும் இன்றி அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ளதாக டெக்கிரன்ச் எனும் இணையதள செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்டது.

“அனுராக் சென் எனும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை கொண்ட தரவுத்தளம் இணையத்தில் காணக்கிடைப்பதாக எங்களிடம் தெரிவித்தார்” என்று அந்த செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Webadmin