ஜனாதிபதி தேர்தல் குறித்து 156 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி முதல் இதுவரை 156 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களில் 153 தேர்தல் சட்ட மீறல்களும் 3 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திலும் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல்கள் நிலையங்களிலும் இந்த முறிப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor