தெரிவுக்குளுவால் நிராகரிக்கப்பட்டார் இளங்ககோன்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென அந்தக் குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அவருக்கு மேலதிகமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவிற்கும் இன்றைய தினம் குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த இருவரும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று (வியாழக்கிழமை) 5ஆவது முறையாகவும் கூடுகிறது.

இன்றைய அமர்வில் முன்னிலையாகுமாறு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor