ஆசியாவின் உயரிய இடத்திற்கு கொண்டு செல்வோம்.

கடந்த ஐந்து வருடங்களில் நடத்திய வெளிப்படையான ஆட்சியின் மூலம் செயற்படுத்தப்பட்ட சீர்திருத்த செயன்முறையை மேலும் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலிலும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழங்கினால் அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் சீர்த்திருத்தம் மேற்கொண்டு இலங்கையை ஆசியாவில் உயரிய இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சிவில் சமூக கொள்கை பிரகடனமும் ஒன்றை பிரதமரிடம் கையளித்தனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் மனித வாழ்க்கையை பாதுகாத்து சுதந்திரமான அர்த்தமுள்ள சமூகத்தை நல்லாட்சியின் போது உருவாக்கியதாகவும் பிரதமர் கூறினார்.

அதேபோல் எவருடைய உயிர்களையும் பறிக்காது அனைவரையும் பாதுகாத்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி சுயாதீன தன்மையை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் போது உரையாற்றிய ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என கூறினார்.

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதனை பலபடுத்த ஐக்கிய தேசியக் முன்னணி அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஆரம்பித்த சீர்திருத்த செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்