சீன மருத்துவமனையொன்றில் தீ விபத்து!!

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.

அன்ஹூய் மாகாணத்தில் உள்ள போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ளடவுன்ஷிப் சுகாதார மையத்தில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து, அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பின்னர் மீட்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

இதன்படி, 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்து சீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor