மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு எதிராக நடவடிக்கை

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வேவன்டன் பகுதி பாடசாலையில் 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் அதிபருக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோனிடம் விசேட கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.

இரு தினங்களுக்கு முன்னர் வேவன்டன் பகுதி பாடசாலை அதிபர் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துகிறார் என்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டார்.

குறித்த அதிபரை பணியில் இருந்து நீக்கி தக்க தண்டனை வழங்குமாறு ஊர்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த அதிபர் பல்லேகல சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor