ஜேர்மனியில் பதற்றம் – துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

கிழக்கு ஜேர்மனிய நகரமான ஹாலேயின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடத்தியவர் தப்பியோடியுள்ளதால், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி, இராணுவ சீருடையை அணிந்திருந்ததாகவும் பல ஆயுதங்கள் அவர் வசம் இருந்ததாகவும் நேரடியாக அவரை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி தப்பி ஓடிவிட்டதாக ஹாலே பிராந்திய வானொலி ஒன்று தெரிவித்துள்ளது.

போலஸ் மாவட்டத்தை சுற்றி வளைத்த பொலிஸார், நகரத்திற்கு வெளியே உள்ள லேண்ட்ஸ்பெர்க்கில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளிலேயே தங்குமாறு அறிவித்தல் பிறப்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor