Bobigny : காவல்துறை அதிகாரி தற்கொலை..!!

இன்று புதன்கிழமை காலை காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Bobigny (Seine-Saint-Denis) நகரில் பணிபுரியும் அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இங்குள்ள உச்சநீதிமன்றத்தில் வைத்து காலை 6 மணிக்கு தனது சேவைத் துப்பாக்கி மூலம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விபரங்களை Bobigny நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட மறுத்துள்ளது.

உயிரிழந்த அதிகாரி 30 வயதுகளையுடையவர் எனவும், குழந்தைகள் எதுவும் இல்லாத தனி நபர் எனவும் அறிய முடிகிறது. இவர் DSPAP (Direction de la sécurité de proximité de l’agglomération parisienne) அதிகாரியாக பணி புரிந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த காவல்துறை அதிகாரியின் தற்கொலை இவ்வருடத்தில் இடம்பெறும் 53 ஆவது தற்கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor