ஹபரணையில் இறந்த யானைகளுக்கு இதுதான் நடந்தது!!

கடந்த சில தினங்களிற்கு முன்னர் ஹபரணை, தும்பிக்குளம் பகுதியில் ஏழு பெண் யானைகள் உயிரிழந்திருந்தன.

குறித்த யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கபட்டிருந்தது.

அதில் மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் நிமியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் யானைகளின் இறப்பிற்கான காரணம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor