உணவில் தலைமுடி – மனைவியின் தலைமுடியை சவரம் செய்த கணவன்.

பங்களாதேஷின் வடமேற்கு பகுதி கிராமமொன்றில் காலை உணவை உட்கொள்ள தயாரான கணவரின் உணவில் நீண்ட தலைமுடியொன்று இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த அவர், மனைவியின் தலைமுடியைப் பலவந்தமாகச் சவரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் தலைமுடியை சவரம் செய்த பின்னர் கணவர் தலைமறைவாகியிருந்த நிலையில், ஜொய்புராட் பகுதியிலுள்ள கிராமத்தில் பொலிஸார் அதிரடிச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது 35 வயதான பப்லு மொண்டால் (Bablu Mondal) என்ற சந்தேக நபர் சிக்கினார்.

சந்தேகநபர் பப்லு மறைந்திருந்த இடம் தொடர்பாக கிராமவாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்திருந்தனர்.

மோதல் ஒன்றில் ஒருவரைக் காயப்படுத்தியதாகவும், தன்னுடைய 23 வயதான மனைவியை மானபங்கம் செய்ததாகவும் பப்லுமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்தகைய நபர்களுக்கு அதிகபட்சத் தண்டனையாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்