சுவரொட்டிகளை அகற்ற 1045 பணியாளர்கள் – 46 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்  சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாட்டுக்காக  சுமார் 46மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்