முறைப்பாடுகளை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன் நிறைவு!

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளான றிசாட் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன் நிறைவடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 3.00 மணி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதிக்குள் 21 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று காலை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை முன்வைத்தார். மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகளும், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.


Recommended For You

About the Author: Editor