மைத்திரி – பசில் அவசர சந்திப்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெறுவது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நாளைய தினம் நடைபெறும் கோத்தபாய ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட அனுமதி வழங்குமாறு, பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், அனுராதபுரத்தில் நாளைய தினம் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

நிமல் சிறிபால டி சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரே இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Recommended For You

About the Author: Editor