யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றம்!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு கனரக வாகனங்களின் உதவியுடன் இரண்டு காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சுமார் 35இற்கும் அதிகளவான யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து அண்மைக்காலமாக பெரும் சேதங்களை விளைவித்து வருகின்றன.

குறிப்பாக நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை மற்றம் உகண தமண பிரதேச செயலாளர் பகுதிகளில் குறித்த யானைகள் நடமாடி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் இப்பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 40இற்கும் மேற்பட்ட யானைகள் உண்பதற்கு வருவதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor