ம.மா/நு/மெராயா த.ம.வி நடைபெற்ற நவராத்திரி விழா

கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களை வேண்டி நவராத்திரி விரதமானது அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ் விரதமானது நவராத்திரி விழாவாக அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்ற நிலையில் ம.மா/நு/மெராயா த.ம.வி இலும் நவராத்திரி விழாவானது 2019/09/29 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்களும் பூசைகள் சிறப்பாக இடம்பெற்றதோடு பத்தாம் நாளாகிய இன்று 2019/10/08 விஜயதசமியானது வெகு விமர்சையாக இடம்பெற்றதோடு நவராத்திரி விழாவானது சிறப்பாக நிறைவடைந்தது.

இப் பூஜைகளானது மெராயா செல்வ விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு லெ.முத்துக்குமார் அவர்ளின் தலைமையில் சிறப்பாக நடாத்தி தரப்பட்டது.

இவ் விழா முடியும் தருணத்தில் பாடசாலை அதிபர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் சில கருத்துக்களை தெரிவித்தார். ” பாடசாலையில் சமூக விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் இந் நவராத்திரி விழாவானது கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடம் பல நற்பண்புகள் வளர்க்கப்படுகின்றது.

மேலும் எம் பாடசாலையில் தொடர்ச்சியாக பல சாதனைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும்” என கூறியதோடு இந் நவராத்திரி விழாவை சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும் அதிபரால் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைக்கப்ட்டது.

இந் நவராத்திரி விழாவில் அதிபர் உட்பட பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(  லிந்துல. சுரேஸ்


Recommended For You

About the Author: Editor