அடுத்த காதலுக்காக காத்திருக்கின்றேன்: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வந்தார் என்பதும் இந்த காதலுக்கு தனது தாயார் சரிகாவிடம் அவர் சம்மதம் பெற்றுவிட்டார் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென ஸ்ருதிஹாசன் – மைக்கேல் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த காதல் முடிவுக்கு வந்தது. இதனை இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் உறுதி செய்து, இனி தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தனது முறிந்த காதல் குறித்து முதல்முறையாக மனம் திறந்தார்.

’காதலுக்கு இது தான் விதி என்றும் எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள்.

காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இந்த காதல் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவம்தான்’ என்று கூறினார்.

மேலும் ’அடுத்த காதலுக்காக காத்திருப்பதாகவும் அந்த காதல் சிறந்த காதலாக இருக்கும் என நம்புவதாகவும், அந்த காதல் கிடைத்தால், மகிழ்ச்சியாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்வேன்’ எனவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor