மதவாதம் தொழில்முறைக்கு பொருந்தாது! – மாகாண முதல்வர் Valérie Pécresse

மதவாதம் கொண்டிருப்பது தொழில்முறைக்கு பொருத்தமற்றது. இதை அடிப்படையாக கொண்டு பதவி நீக்கம் செய்யவேண்டும் என இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்கள் ஆன நிலையில், நேற்று வானொலி ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்ததன் படி,

இஸ்லாமித மதவாதம் என்பது மிக ஆபத்தானது. அரச பணியில் இருக்கும் ஒருவருக்கு அதன் சட்ட திட்டங்களை விட மதம் பெரிதாக தோன்றுகின்றதென்றால் அது மிக ஆபத்தானது. அது அப்பணிக்கு பொருந்தாதது என அவர் குறிப்பிட்டார்.

தவிர, இதனை அடிப்படையாக கொண்டு அந்நபர்களை பணிநீக்கமும் செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை முன்னதாக முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor