விசாரணைகளில் தெரியவந்த சில அதிர்ச்சி தகவல்கள்..!

காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடத்திய அதிகாரியான Mickaël Harpon வீட்டில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் தாக்குதல் நடத்தவேண்டிய / கொல்லப்படவேண்டிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் Mickaël Harpon இன் வீட்டுக் கணனியில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Gonesse (Val-d’Oise) நகரில் உள்ள அவரது வீடு பயங்கரவாத தடுப்புப்பிரிவினரின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. USB சேமிப்பகம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் பல பயங்கரவாதம் தொடர்பான காணொளிகள் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

தவிர Mickaël Harpon இடம் சக அதிகாரி ஒருவர் முன்னதாகவே தீவிர மதவாதம் இருந்ததை அவதானித்ததாகவும், சார்லி-எப்த்தோ பத்திரிகை மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் முகமாக தம்மிடம் பேசியிருந்ததாகவும் குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

ஆனால் அது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் செல்லும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னர் Mickaël Harpon இன் மனைவி தொடர்ச்சியாக 70 மணிநேரம் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். சமீப நாட்களாக தமது கணவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. ஆனால் அது பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என தாம் எண்ணியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.


Recommended For You

About the Author: Editor