ஒரே குடும்பத்தில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் பலி..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். இவர்களில் 8 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Bouches-du-Rhône நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றிருந்த போது மூவரின் சடலங்களை மாத்திரமே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இங்குள்ள 1,800 பேர் மாத்திரமே வசிக்கும் Eygalières எனும் சிறு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று காலை கணவன், மனைவி மற்றும் அவர்களது 8 வயது மகள் ஆகியோரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

விசாரணைகளின் படி, குறித்த குடும்பத்தலைவரான கணவர், கைத்துப்பாக்கி ஒன்றின் மூலம் தனது மனைவியையும் மகளையும் சுட்டுக்கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டதாக அறிய முடிகிறது.

வீட்டினை சோதனையிட்ட காவல்துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றியதாக அறிய முடிகிறது. இதுவரை இந்த சம்பவத்துக்குரிய காரணம் எதுவும் அறிய முடியவில்லை.

குடும்ப வன்முறை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor