தாக்குதலாளியை சுட்டுவீழ்த்திய இளம் ‘ஹீரோ’..!!

பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் நடத்திய அதிகாரியை மூன்று அதிகாரிகள் இணைந்து சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் மூவருக்கும் இராணுவ கெளரவிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இளம் பயிற்சி அதிகாரி ஒருவரும் உள்ளார்.

ஒக்டோபர் 3 தாக்குதல் இடம்பெறுவதற்கு ஆறு நாட்கள் முன்னரே இவர் தலைமைச் செயலகத்துக்கு பணிக்கு வந்துள்ளார். ஒக்டோபர் 7, நேற்று திங்கட்கிழமை இத்தகவல்களை எலிசே மாளிகை அறிவித்துள்ளது. இருப்பினும் கெளரவிப்பு நிகழ்வு தொடர்பான சரியான திகதியினை வெளியிடவில்லை.

24 வயதுடைய குறித்த அதிகாரி, தாக்குதலின் போது மிக வேகமாக செயற்பட்டு தாக்குதலாளியை சுட்டுக்கொன்றுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற அஞ்சல் நிகழ்வில் குறித்த அதிகாரி தனக்கான கெளரவிப்பினை தாம் விரும்பவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor