இல்-து-பிரான்சுக்குள் 630 கி.மீ போக்குவரத்து நெரிசல்..!!

இன்று செவ்வாய்க்கிழமை காலை இல்-து-பிரான்சுக்குள் மிக அதிகளவான போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.

Radio France இறுவனத்தின் ஒரு பிரிவான PC Mobilités de Radio France நிறுவனம் இந்த கணிப்பை மேற்கொண்டுள்ளது. இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி காலை 9 மணிக்கு மொத்தமாக 630 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

மழை மற்றும் சில விபரிக்கமுடியாத விபத்துக்களால் இந்த போக்குவரத்து நெரிசல் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வீதிகளில் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இல்-து-பிரான்சுக்குள் அதிகூடிய போக்குவரத்து நெரிசலாக பெப்ரவரி 6, 2018 ஆம் ஆண்டு பதிவான 707 கி.மீ நெரிசலே அதிகூடிய எண்ணிக்கையாக உள்ளது. அதன் பின்னர் மிக அதிகளவான சாதனையாக இன்றைய நாள் பதிவாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor