ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புகிறது!

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக தொடருந்து தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் ரயில் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பும் எனவும் சகல அலுவலக ரயில்களும் சேவையில் ஈடுபடும் என ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த ரயில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்தசந்திப்பின் போது ரயில் தொழிற்சங்கத்தினரின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனைத்து தொழிற்சங்கங்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரயில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி இதன்போது உறுத்தியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் தொழிற்சங்கள் வேதன ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையொன்று ஈடுபட்டதாகவும் ரயில் கட்டுப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தமது வேதன பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு வேதன ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி முதல் தொடருந்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட நிலையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor