பொலிஸாரினால் சஜித்திற்கு ஏற்பட்ட நிலமை

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.

புதிய இலங்கைக்கு சஜித் என குறிப்பிட்டு பரவலாக வவுனியா நகர், மன்னார் வீதி, குருமன்காட்டு சந்தி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

இச்சுவரொட்டிகளை இன்று மாலை வவுனியா பொலிஸார் நடமாடும் பொலிஸாரின் வாகனத்தில் சென்று கிழித்தெறிந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாரிடம் வினாவிய போது,

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அவர்களிடம் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலின் பிரகாரம் இதனை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor